முகப்பு
தற்போதைய செய்திகள்

தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 5 பவுன் தாலி சங்கிலி பறிப்பு

சிதம்பரம் அருகே மொட்டை மாடியில் காற்றுக்காக படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து 5 பவுன் தாலி சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:55 AM
பகிர்:

சிதம்பரம் அருகே மொட்டை மாடியில் காற்றுக்காக படுத்து தூங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கழுத்திலிருந்து 5 பவுன் தாலி சங்கிலியை மர்மநபர் ஒருவர் பறித்துச் சென்றார்.

சிதம்பரம் அருகே கீழ்புவனகிரியைச் சேர்ந்த சின்னப்ப முதலியார்தெருவில் வசிப்பவர் செந்தில்குமார். இவர் மற்றும் இவரது மனைவி மகேஸ்வரி (32) மற்றும் குழந்தைகள் ஆகியோர் வெள்ளிக்கிழமை இரவு காற்றுக்காக மொட்டை மாடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தலைமறைவானார். இதுகுறித்து புகாரின் பேரில் புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.