முகப்பு
தற்போதைய செய்திகள்

கல்வி பிச்சை கேட்டு பா.ஜ.க. வினர் நூதன போராட்டம்

பா.ஜ. கட்சியின் மாவட்ட செயலர் சி. கார்த்திக் நாராயணன் தலைமையில் எஸ்.சி். அணி மாநில துணைத் தலைவர் ஜி. முருகதாஸ், பாளையங்கோட்டை மண்டல தலைவர் இ. மணிகண்டன்,  மாவட்ட அமைப்பு செயலர் டி.வி. சுரேஷ், மாநகராட்சி உறுப்பினர் அழகுராஜ், இளைஞரணி மாவட்ட செயலர் பாஸ்கர் உள்ளிட்டோர் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை

Updated On : 27 மே 2013, 4:49 pm IST
பகிர்:

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பா.ஜ. கட்சியினர் இன்று கல்வி பிச்சை கேட்டு கையில் திருவோடு ஏந்தி நூதன போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பா.ஜ. கட்சியின் மாவட்ட செயலர் சி. கார்த்திக் நாராயணன் தலைமையில் எஸ்.சி். அணி மாநில துணைத் தலைவர் ஜி. முருகதாஸ், பாளையங்கோட்டை மண்டல தலைவர் இ. மணிகண்டன்,  மாவட்ட அமைப்பு செயலர் டி.வி. சுரேஷ், மாநகராட்சி உறுப்பினர் அழகுராஜ், இளைஞரணி மாவட்ட செயலர் பாஸ்கர் உள்ளிட்டோர் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்தக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பதற்காக திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர்.இவர்கள் திடீரென கைகளில் திருவோடு ஏந்தி கல்வி பிச்சை கேட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு வந்த போலீஸார் இங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது என கூறி அவர்களை தடுத்தனர். இதையடுத்து முக்கிய நிர்வாகிகள் சிலர் மட்டும் மாவட்ட ஆட்சியர் சி. சமயமூர்த்தியை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் ஏழை எளிய மாணவர்களுக்கு 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் திருநெல்வேலி மாவட்டத்தில் எந்த தனியார் மெட்ரிக் பள்ளிகளிலும் இந்த இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை.இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் தனியார் பள்ளிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  ஏழை மாணவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டிற்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பினை அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளி அறிவிப்பு பலகைகளிலும் ஒட்ட வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஆனால் எந்த பள்ளியும் அதை பின்பற்றவில்லை.

Advertisement

Advertisement

இதேபோல சில பள்ளிகளில் அதிகளவில் கல்வி கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.  பல பள்ளிகளில் கழிப்பறை, விளையாட்டு மைதானம் போன்ற வசதிகள் இல்லை. விதிகளை மீறி அடுக்குமாடி கட்டடங்களை கட்டியுள்ளனர். நுழைவுத் தேர்வு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும் சில பள்ளிகளில் 1 முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு நடத்தியுள்ளனர்.எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விசயத்தில் தனி கவனம் செலுத்தி அனைத்து பள்ளிகளையும் நேர்மையான அதிகாரிகள் கொண்ட குழு மூலம் ஆய்வு செய்து விதிமுறை மீறல்களை கண்டறிந்து, சம்பந்தப்பட்ட பள்ளிகளின் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றனர் அவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.