மினிடெம்போ லாரி மோதிய விபத்தில் டெய்லர் சாவு: மூவர் கவலைக்கிடம்
சிதம்பரம் அருகே மினிடெம்போ லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த டெய்லர் இறந்தர். மேலும் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் படுகாயமுற்று கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
சிதம்பரம் அருகே மினிடெம்போ லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த டெய்லர் இறந்தர். மேலும் அவரது மனைவி மற்றும் இரு மகன்கள் படுகாயமுற்று கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அனந்தப்பேட்டையைச் சேர்ந்தவர் மும்மூர்த்தி (36). டெய்லர் வேலை செய்யும் இவர் தனது மனைவி வெற்றிக்கொடி, மகன்கள் பாரதி (7), குருபிரசன்னா (6) ஆகியோருடன் ஹீரோ ஹோண்டா மோட்டார் சைக்கிளி்ல் மே 29-ம் தேதி நடைபெறவுள்ள தனது மகன்கள் காதுக்குத்து நிகழ்ச்சிக்கான பத்திரிகையை காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள குலதெய்வம் கோயிலில் வைத்து படைக்க சென்றார்.
கோயிலில் படைத்து விட்டு ஊர் திரும்பி வந்து கொண்டிருந்த போது சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையில் தவர்த்தாம்பட்டு அருகே கூத்தப்பெருமாள் கோயில் எனுமிடத்தில் சிதம்பரத்திலிருந்து காட்டுமன்னார்கோயில் நோக்கி அதிவேகமாக வந்த மினிடெம்போ லாரி ஒன்று, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இவ்விபத்தில் மும்மூர்த்தி சம்பவ இடத்திலேயே இறந்தார். இவரது மனைவி வெற்றிக்கொடி, மகன்கள் பாரதி, குருபிரசன்னா ஆகிய மூவரும் படுகாயமுற்று கவலைக்கிடமான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து குமராட்சி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.