முகப்பு
தற்போதைய செய்திகள்

வெள்ளாற்றில் கடல்நீர் உட்புகுந்தது: தடுப்பணை கட்ட விவசாயிகள் கோரிக்கை

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு மதகிலிருந்து பரங்கிப்பேட்டை வரை வெள்ளாறு வடிகாலாக கடலுக்கு செல்கிறது. வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு வெள்ளப் பெருக்கு ஏற்படாததாலும், ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்படுவதாலும் படுகை

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:56 AM
பகிர்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வெள்ளாற்றில் கடல்உட்புகுந்து, உப்பனாறாக மாறிவருகிறது. இதனால் விவசாயம் மற்றும் குடிநீர் பாதிக்கப்பட்டுள்ளது என அப்பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே சேத்தியாத்தோப்பு மதகிலிருந்து பரங்கிப்பேட்டை வரை வெள்ளாறு வடிகாலாக கடலுக்கு செல்கிறது. வெள்ளாற்றில் கடந்த சில ஆண்டுகளாக போதிய அளவு வெள்ளப் பெருக்கு ஏற்படாததாலும், ஆற்றுப் படுகையில் மணல் அள்ளப்படுவதாலும் படுகை ஆழமாக போய்விட்டதாலும், கடல்நீர் வெள்ளாற்றில் அதிகளவு புகுந்து வெள்ளாறு உப்பனாறு போல் ஆகிவிட்டது.

இதுகுறித்து தமிழக உழவர் முன்னணி கீரப்பாளையம் ஒன்றியச் செயலாளர் பொறியாளர் என்.ஜெயபாலன் தெரிவித்ததாவது:

வெள்ளாற்றில் கடல் உப்புநீர் முகத்துவாரத்திலிருந்து சுமார் 15 கி.மீட்டர் வரை உட்புகுந்துவிட்டது. கீழமூங்கிலடி, புவனகிரி, வடஹரிராஜபுரம், சாக்காங்குடி, ஆயிப்பேட்டை வரை தினமும் கடல்நீர் உட்புகுதுவதும் வடிவதுமாய் உள்ளது. இதனால் அப்பகுதி ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக பாசனம் பெறும் வேளாண்மையும், மேல்நிலைத்தொட்டி மூலம் குடிநீர் பெறுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் அடுத்தடுத்த ஊர்களில் உள்ள ஆழ்குழாய் கிணறுகளும் பயனற்று போய்விடும். எனவே கொள்ளிடம் வடிநிலை கோட்ட பொதுப்பணித்துறையினர் வெள்ளாற்றின் குறுக்கே மேலமூங்கிலடிக்கு கிழக்கே ஒரு தடுப்பணை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →