சிதம்பரம் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத் தேர்தல்: 11 பேர் வேட்புமனு தாக்கல்
சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க 11 இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் பா.மில்லர், உ.ராஜரத்தினம், ரா.கோவிந்தராஜன், ச.அஞ்சலி, இ.சத்தியா, ந.ஜெயந்தி, சா.நாராயணமூர்த்தி, த.
சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க இயக்குநர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் 11 பேர் செவாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்க 11 இயக்குநர்கள் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நடைபெற்றது. அதிமுக சார்பில் பா.மில்லர், உ.ராஜரத்தினம், ரா.கோவிந்தராஜன், ச.அஞ்சலி, இ.சத்தியா, ந.ஜெயந்தி, சா.நாராயணமூர்த்தி, த.நாகராஜன், ச.வளர்மதி, சா.ஜெயபால், கே.டி.செல்வம் ஆகிய 11 பேர் தேர்தல் அதிகாரி துணைப் பதிவாளர் கமலக்கண்ணனிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். 11 இயக்குநர்கள் பதவிக்கு 11 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.
இந்நிகழ்ச்சியில் அதிமுக நகரச் செயலாளர் தோப்பு கே.சுந்தர், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் கே.ஏ.பாண்டியன், மாவட்ட இலக்கிய அணி செயலர் சொ.ஜவகர், பொதுக்குழு உறுப்பினர் தில்லை சேகர், நகர அவைத் தலைவர் எம்.யேசுராஜ், தொகுதி துணைச் செயலாளர் சி.கே.சுரேஷ்பாபு, நகர பேரவைச் செயலாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.