சிதம்பரம் மாணவி வசுமித்ரா மாநில அளவில் மூன்றாமிடம்
சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.வி.வசுமித்ரா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
சிதம்பரம் நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி எல்.வி.வசுமித்ரா 496 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.
மாணவி எல்.வி.வசுமித்ரா பெற்றுள்ள மதிப்பெண்கள் விபரம்: தமிழ்- 97, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூகஅறிவியல்-100. மொத்த மதிப்பெண்கள்- 496. சிதம்பரம் அருகே உள்ள அம்மாபேட்டை மருதமுத்து நகரில் வசிக்கும் மாணவி வசுமித்ராவின் தந்தை எல்.சரவணன் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கக கண்காணிப்பாளராக பணியாற்றுகிறார். தாயார் ஆர்.புனிதா நி்ர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவரகளது மகள் எல்.வி.வசுமித்ரா, மகன் தீபக்ராஜ் 2-ம் வகுப்பு படிக்கிறார். மாநில அளவில் மூன்றாமிடம் பெற்று சாதனை படைத்த மாணவி எல்.வி.வசுமித்ராவிற்கு, பள்ளி முதல்வர் மேரி இனிப்பு வழங்கி பாராட்டினார்.