முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சாலை விபத்தில் மூவர் பலி

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட இரு சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

Updated On : 1 நவம்பர், 2013 at 8:20 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் இன்று அதிகாலை ஏற்பட்ட இரு சாலை விபத்தில் மூவர் உயிரிழந்தனர்.

திருநெல்வேலி மாவட்டம், தென்காசி தாலுகா, ஆயக்குடி, பம்புலி காலனியைச் சேர்ந்தவர் கொம்புமாடன் மனைவி அன்னபாக்கியம் (45). இதே இடத்தைச் சேர்ந்தவர் பெரியநாயகம் மகன் சு்பபையா (23). சுப்பையா ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளிலின் பின்னால் அன்னபாக்கியம் அமர்ந்து வந்துள்ளார். மதுரை-ஸ்ரீவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், லட்சுமியாபுரம் விலக்கை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் நோக்கி மோட்டார் சைக்கிள் அதிகாலை 3 மணி அளவில் வந்து கொண்டிருந்த போது, எதிரே மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சுப்பையா மற்றும் அன்னபாக்கியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

அன்னபாக்கியத்தின் செல்போனில் அவரது மகனிடம் போலீஸார் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அன்னபாக்கியம் நாமக்கல்லில் உள்ள மகளைப் பார்க்கச் செல்வதாகக் கூறிச் சென்றுள்ளார். சுப்பையா குறித்து தெரியாது என்று தெரிவித்துவிட்டார். இதனால் சுப்பையாவை அன்னபாக்கியம் எங்கு சந்தித்து எப்படி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார் என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Advertisement

 இது குறித்து நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து லாரி டிரைவர் கோயமுத்தூர், காரமடை, தென்கரையைச் சேர்ந்த எம்.நாகராஜன் என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.