கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயம் முற்றுகை
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், கடையம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நடைபெற்ற பிரசங்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடையம் அருகே புலவனூரில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை அங்கு பிரசங்கம் நடைபெற்றது. பிரசங்கத்தில் பெண் ஒருவர் தெரிவித்த கருத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து புலவனூர் கிாரம மக்கள் திரண்டு கிறிஸ்தவ ஆலயத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டனர்.