முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லை மாவட்டத்தில் மழை நீடிப்பு: சேர்வலாறு அணை நீர்மட்டம் 100 அடி நெருங்குகிறது

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:37 PM
பகிர்:

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. செவ்வாய்க்கிழமை சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் உள்ளது.

வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் மழை நீடித்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை (மில்லி மீட்டரில்): பாபநாசம் அணை 87, பாபநாசம் கீழ் அணை 35, சேர்வலாறு அணை 54, மணிமுத்தாறு அணை

20.2, கடனாநதி அணை 5.6, ராமநதி அணை 2, கருப்பாநதி அணை 14.5, குண்டாறு அணை 7.2, அடவிநயினார் அணை 4, வடக்கு பச்சையாறு 3.6, நம்பியாறு அணை 25, திருநெல்வேலி 32, பாளையங்கோட்டை 17, அம்பாசமுத்திரம் 26.3, சேரன்மகாதேவி 13.4.

மழையால் வாழைகள் சேதம்: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, மேலப்பாளையம், சுத்தமல்லி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, தென்காசி, சங்கரன்கோவில், வள்ளியூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் பேட்டை, பத்தமடை, கல்லூர், முக்கூடல் பகுதியில் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. நீர்மட்டம் உயருகிறது: பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 3359.12 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 4.65 அடி உயர்ந்து 82.00 அடியாக இருந்தது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 8.36 அடி உயர்ந்து 95.54 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து கணிசமாக இருந்ததால் நீர்மட்டம் 100 அடியை நெருங்கும் நிலையில் இருப்பதாக அணை வட்டாரங்கள் தெரிவித்தன.

மணிமு்த்தாறு அணையின் நீர்மட்டம் 3.80 அடி உயர்ந்து 59.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 1780 கனஅடி நீர்வரத்து இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பதால் பாபநாசம், மணிமுத்தாறு அணைகள் மூடப்பட்டுள்ளன.

கடனாநதி அணைக்கு விநாடிக்கு 145.98 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 49.50 அடியாக இருந்தது. ராமநதி அணையின் நீர்மட்டம் 51.00 அடியாகவும், கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 40.45 அடியாகவும், குண்டாறு அணையின் நீர்மட்டம் 36.10 அடியாகவும்,

அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 91.75 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 7.00 அடியாகவும், நம்பியாறு நீர்மட்டம் 9.18 அடியாகவும், கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 7.50 அடியாகவும் இருந்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →