முகப்பு
தற்போதைய செய்திகள்

காமன்வெல்த் மாநாட்டைப் புறக்கணிக்க வலியுறுத்தி 12-ல் முழு அடைப்பு: தமிழ் அமைப்புகள் அறிவிப்பு

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும்

Updated On : 8 நவம்பர், 2013 at 9:00 PM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:10 AM

இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பர் 12-ஆம் தேதி தமிழகம் தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் தமிழ் அமைப்புகள் அமைப்புகள் அறிவித்துள்ளன.

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தந்தைப் பெரியார் திராவிடர் கழம், மனிதநேய மக்கள் கட்சி உள்பட 21 அமைப்புகள் இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த, இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள், முழு அடைப்புப் போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாகவும் தெரிவித்தனர்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.