நெல்லை அருகே விருந்து சாப்பிட்ட 50 பேர் மயக்கம்
திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீ்ஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
திருநெல்வேலி அருகே மணிமூர்த்தீ்ஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் விருந்து சாப்பிட்ட 50 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடுகள் அதிகரித்து வருகிறது. டெங்கு போன்ற நோய்கள் தாக்குவதை தவிர்க்க நீரை காய்ச்சி பயன்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகள் பிரசாரம் செய்து வருகின்றன.
இதற்கிடையே திருநெல்வேலி அருகே தச்சநல்லூர் மண்டலம், 4 வது வார்டு மணிமூர்த்தீஸ்வரத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டது
விருந்து சாப்பிட்டவர்களில் 50 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். ஒரே சமயத்தில் 50 பேருக்கு மயக்கம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.