மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கைதி வெள்ளிக்கிழமை இரவு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கீரைத்துறை போலீஸ் நிலையப் பகுதிக்கு உள்பட்ட இந்திரா நகரைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42). இவர் கொலை வழக்கில் தண்டனை பெற்று மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாள்களாக இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. வயிற்றுவலியால் அவதிப்பட்ட அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.
கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்றுவரும் அவர் வெள்ளிக்கிழமை இரவு திடீரென அங்கிருந்த டியூப்லைட்டை கழற்றிக்கொண்டு கழிப்பறைக்குச் சென்றுள்ளார். பின்னர் டியூப்லைட்டை உடைத்து கழுத்தில் அறுத்துக்கொள்ள முயற்சித்தாகவும் தெரிகிறது.
இதையடுத்து அங்கிருந்த காவலர்கள் விரைந்து சென்று கைதியின் தற்கொலை முயற்சியை தடுத்துள்ளனர். பின்னர் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் குறிóத்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரித்துவருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.