முகப்பு
தற்போதைய செய்திகள்

நீர்பிடிப்பு பகுதியில் மழை: அடவிநயினார், கருப்பாநதி அணைகள் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:44 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அடவிநயினார், கருப்பாநதி அணைகளுக்கு நீ்ர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவ தொடங்கி பெய்து வருகிறது. கடந்த சில தினங்களாக மழை பெய்யவில்லை. இதனிடையே வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணையில் 45 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 33 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 1 மி.மீ மழையும், கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் தலா 40 மி.மீ மழையும், குண்டாறில் 8.2 மி.மீ மழையும், சிவகிரியில் 19 மி.மீ மழையும், தென்காசியில் 1 மி.மீ மழையும், வீரகேரளம்புதூரில் 3 மி.மீ மழையும், செங்கோட்டையில் 13 மி,மீ மழையும் பதிவாகியுள்ளது.

இம்மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 147 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையின் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 93.50 அடியாக இருந்தது. கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 2.90 அடி நீர்மட்டம் உயர்ந்து 43.97 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 101 கனஅடி நீர்வரத்து இருந்தது.

அணைகளின் நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.20 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 101.54 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 54.75 அடியாகவும், வடக்குபச்சையாறு, கொடுமுடியாறு அணைகளின் நீர்மட்டம் 9.00 அடியாகவும் இருந்தது.

இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் அணைகளுக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →