மணல் பதுக்கல் : மாட்டுவண்டிகளை சிறைபிடித்த வட்டாட்சியர்
பண்ருட்டி லிங்க் ரோடு, 7த் டே பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கள்ளத் தனமாக மணல் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டதை பார்த்த பண்ருட்டி வட்டாட்சியர் குமுதம் மாட்டு வண்டிகளை கையும் களவுமாக பிடித்தார்.
பண்ருட்டி லிங்க் ரோடு, 7த் டே பள்ளி அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் கள்ளத் தனமாக மணல் கொண்டு வரப்பட்டு கொட்டப்பட்டதை பார்த்த பண்ருட்டி வட்டாட்சியர் குமுதம் மாட்டு வண்டிகளை கையும் களவுமாக பிடித்தார்.
பசுமைத் தீர்ப்பயம் அண்மையில், ஆறுகளில் மணல் எடுக்க தடை விதித்துள்ளது. இதனால், பண்ருட்டி பகுதியில் உள்ள தென்பெண்ணையாறு, கெரிலம் நதி ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த அரசு மணல் குவாரிகள் மூடப்பட்டன.
இதனால் மணல் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளதால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், மாட்டு வண்டிகளில் முறைகேடாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. பண்ருட்டி லிங்க் ரோடு அருகே தனியாருக்கு சொந்தமான இடத்தில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வந்து கொட்டி, இரவு நேரத்தில் லாரிகள் மூலம் வெளியிடங்களுக்கு மணல் எடுத்துச் செல்லப்பாடுவதாக தெரிய வருகிறது.
செவ்வாய் கிழமை அன்று இவ்வாறு மணல் கொட்டிய மாட்டு வண்டிகைளை வட்டாட்சியர் குமுதம் கையும் களவுமாக பிடித்தார். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்களிடம் முறைகேடாக மணல் அள்ளிய மாட்டுவண்டிகள் மீதும், இடத்தின் உரிமையாளர் மீதும் வழக்குப் பதிவு செய்யும்படி வட்டாட்சியர் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அப்பகுதிக்கு வந்திருந்த காவலர்களோ, காவல்துறை ஆய்வாளர் இடத்தைப் பார்வையிட்டு மட்டுமே வரச் சொன்னார். அவர் வந்து பார்த்த பிறகுதான் முடிவு எடுக்கப்படும் என்று சொன்னார்கள். இதனால், வட்டாட்சியருக்கும், காவல்துறையிருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்தில் இருந்து சென்றுவிட்டனர்.
வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் மாட்டு வண்டிகளை சிறை பிடித்து வைத்துள்ளனர்.