அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்
ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு,
ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு, தேவலாபுரம் பகுதிகளில் நடத்திய திடீர் சோதனையில் 2 பகுதிகளிலும் தலா 2 மாட்டு வண்டிகள் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது. அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.