முகப்பு
தற்போதைய செய்திகள்

விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால் ரயில் நிலையத்தில் ஜப்தி செய்ய உத்தரவு

கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணிகளுக்காக தனது நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்திருந்தார். அவருக்குத் தகுந்த இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகினார்

Updated On : 13 நவம்பர், 2013 at 3:40 PM
பகிர்:

கரூர் - சேலம் அகல ரயில் பாதை பணிகளுக்காக தனது நிலத்தை விவசாயி ஒருவர் கொடுத்திருந்தார். அவருக்குத் தகுந்த இழப்பீடு எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தை அணுகினார். அந்த உத்தரவுப் படி, ரயில்வே துறை விவசாயிக்கு இழப்பீடு வழங்காததால், கரூர் ரயில் நிலையத்தில் உள்ள பொருள்களை ஜப்தி செய்ய கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை அடுத்து ஜப்தி உத்தரவுடன் நீதிமன்ற அமீனா ரயில் நிலையத்துக்கு வந்தார். இதனால் அங்கே பரபரப்பு எழுந்தது. ரயில் நிலைய அதிகாரிகள், தங்கள் மேலதிகாரிகளிடம் பேசி, 3 வாரத்துக்குள் பதில் தருவதாக உறுதி அளித்தனர். இதை அடுத்து, ஜப்தி நடவடிக்கை தள்ளிப் போடப்பட்டது. இதனால் அங்கே பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.