தற்போதைய செய்திகள்

சென்னை கலங்கரை விளக்கத்தை திறந்து வைத்தார் வாசன்

தினமணி

பராமரிப்பு பணிகள் மற்றும் புத்தாக்கப் பணிகளுக்காக மூடப்பட்டிருந்த சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலங்கரை விளக்கத்தை மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் பொதுமக்கள் பார்வைக்காக திறந்து வைத்தார்.

சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னை கலங்கரை விளக்கம் பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

1977–ம் ஆண்டு ஜனவரி 10ந்தேதி திறக்கப்பட்ட இந்த மெரினா கலங்கரை விளக்கம், கடந்த 1994–ம் ஆண்டு பாதுகாப்புக்காக  பொது மக்கள் பார்வையிட தடை விதிக்கப்பட்டது.

தற்போது சென்னை கலங்கரை விளக்கம் ரூ.1 கோடி செலவில் ‘லிப்ட்’ மற்றும் நவீன வசதியுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் கப்பல் அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய கப்பல் துறை பற்றிய தகவல்கள், புகைப்படங்கள் போன்றவை இடம் பெற்றுள்ளன.

நவீனமயமாக்கப்பட்டுள்ள சென்னை கலங்கரை விளக்கம், கப்பல் அருட்காட்சியகம் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வையிடுவதற்கான திறப்பு விழா இந்தியாவில் 7 இடங்களில் அமைக்கப்பட உள்ள நவீன கப்பல் தொடர்பு மையங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை இன்று நடந்தது. இதில் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு கலங்கரை விளக்கத்தை திறந்து வைத்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாடலீஸ்வரா் கோயில் குளத்தில் இறந்து மிதக்கும் மீன்கள்

மேலிருப்பு முத்தாலம்மன் கோயில் திருவிழா நடத்தத் தடை

வாகனங்கள் மீதான இ - செலான் அபராதம்: சிறப்பு லோக் அதாலத் நடத்தக் கோரிக்கை

ஏரியில் மூழ்கிய இளைஞா் சடலமாக மீட்பு

தேசிய மாணவா் படை ஆண்டு முகாம் தொடக்கம்

SCROLL FOR NEXT