நவ.23 மெகா லோக் அதாலத்: ஸ்ரீவிலி. மாவட்ட நீதிமன்றத்தில் பணிகள் தீவிரம்
தேசிய அளவிலான மெகா லோக் அதாலத் இம் மாதம் 23-ம் தேதி அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறவுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின்
தற்போதைய செய்திகள்நவ.23 மெகா லோக் அதாலத்: ஸ்ரீவிலி. மாவட்ட நீதிமன்றத்தில் பணிகள் தீவிரம்
தேசிய அளவிலான மெகா லோக் அதாலத் இம் மாதம் 23-ம் தேதி அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறவுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின்
தேசிய அளவிலான மெகா லோக் அதாலத் இம் மாதம் 23-ம் தேதி அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெறவுள்ளது. இதற்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியுமான ஆர்.தாரணி தலைமையில் தீவிரமான பணிகள் நடைபெற்று வருகிறது.
இது குறித்து சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான ஆர்.தாரணி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன் தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் இம் மாதம் 23-ம் தேதி (சனிக்கிழமை) தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் மெகா லோக் அதாலத் நடைபெறவுள்ளது.நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுவதால், முத்திரைத் தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்பப் பெறலாம். வழக்குகளில் தீர்வு கண்டதும் அதற்கான தீர்ப்பு நகல் உத்தரவு உடனே வழங்கப்படும். மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல் முறையீடு செய்ய இயலாது. வழக்கில் வென்றவர், தோற்றவர் என்ற எண்ணம் இருக்காது. எனவே இப்படிப்பட்ட உன்னதமான வாய்ப்பை பொதுமக்களும், வழக்காளர்களும் பயன்படுத்திக் கொண்டு வழக்குகளே இல்லாத விருதுநகர் மாவட்டத்தை வடிவமைக்க வேண்டும்.
சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் மெகா லோக் அதாலத்தில் பல்வேறு சட்டம் சார்ந்த பிரச்னைகளுக்கு 23-ம் தேதி நடைபெறவுள்ள மக்கள் நீதிமன்றத்தில், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத்திற்கு வராத சட்டப் பிரச்னைகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்திக் கொள்ளக் கூடிய தன்மையுள்ள வழக்குகள், காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், இல்வாழ்க்கை வழக்கு மற்றும் குடும்ப நீதிமன்ற வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு வழக்குகள், உரிமையியல் வழக்குகள் (வாடகை, வங்கிக் கடன், வசதி உரிமை வழக்குகள், கடன் வசூலித்தல்) மற்றும் தீர்ப்பாய வழக்குகள், வருவாய்த்துறை சம்பந்தப்பட்ட வழக்குகள், மின் கட்டணம் மற்றும் தண்ணீர் கட்டணம் தொடர்பான பிரச்னைகள், வரி தொடர்பான பிரச்னைகள், பணி பிரச்னைகள் (ஊதியம், படிகள் மற்றும் ஓய்வுகால பலன்கள்), வனச்சட்ட வழக்குகள் உள்பட சட்டத்தினால் தீர்க்கப்படக்கூடிய எந்த ஒரு பிரச்னையும் நீதிமன்றத்திற்கு செல்லக்கூடிய தன்மை இருந்தால் அவைகளையும் மெகா லோக் அதாலத்தில் எடுத்து முடிக்கலாம்.
இது குறித்து மேலும் விவரங்கள் அறந்து கொள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வரும் சட்டப் பணிகள் ஆணைக் குழுவினை நேரில் அணுகலாம். அல்லது 94425-35122 என்ற செல் போனில் தொடர்பு கொள்ளாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.