சிதம்பரத்தில் கடும் பனி பொழிவு! ஐயப்ப பக்தர்கள், வாகன ஓட்டிகள் அவதி
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த கடும் பனிபொழிவினால் ஐயப்ப பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
சிதம்பரத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பெய்த கடும் பனிபொழிவினால் ஐயப்ப பக்தர்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகினர்.
கார்த்திகை 1-ம் தேதி என்பதால் ஐயப்ப பக்தர்கள் துளசி மணி மாலை அணிந்து விரத்தத்தை தொடங்கும் நாளாகும். இந்நிலையில் சிதம்பரம் நகரில் கார்த்திகை 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கடும் பனி பொழிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் எதிரே வருபவர்கள் தெரியவில்லை. பஸ், லாரி மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகள் மஞ்சல் லைட்டும், முகப்பு லைட்டும் போட்டுதான் வாகனம் ஓட்டினர். மேலும் மாலை அணிந்து விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள் கடும் பணியிலும், குளிரிலும் சில்லென்ற நீரி்ல் குளித்துவிட்டு கடும் அவதியுடன் கோயிலுக்கு சென்றதை பார்க்க முடிந்தது.