முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் திரளானோர் சபரிமலை பயணத்திற்கு மாலை அணிந்தனர்!

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலிலும், அண்ணாமலைநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலிலும் திரளான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:49 PM
பகிர்:

கார்த்திகை 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் திரளான ஐயப்ப பக்தர்கள் சபரமலை பயணத்திற்கு மாலை அணிந்து கொண்டனர்.

சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலிலும், அண்ணாமலைநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலிலும் திரளான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்கும் நாள் என்பதால் சிதம்பரம் நகரில் மேலரதவீதி, தெற்குரதவீதியில் ஐயப்ப வேட்டி, துண்டு, துளசி மாலை, மணி மாலை, சந்தனப்பவுடர் மற்றும் பூஜை சாமான்கள் வாங்க திரளான பக்தர்கள் குவிந்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →