முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவபைரவர் பாடல்கள் சிடி வெளியீடு!

சாகித்ய கர்த்தா ஐயப்ப தீட்சிதர் எழுதி, கிர்த்தனைகளை செல்வி கீர்த்தனா பாடிய சிடி வெளியிட்டு விழா ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்றது. உ.வெங்கடேச தீக்ஷிதர் வரவேற்றார். பிரம்ம ஸ்ரீ உ.ர.உமாநாத

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:50 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் 'நவ பைரவர்' பாடல்கள் சிடி  வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சாகித்ய கர்த்தா ஐயப்ப தீட்சிதர் எழுதி, கிர்த்தனைகளை செல்வி கீர்த்தனா பாடிய சிடி வெளியிட்டு விழா ஸ்ரீநடராஜர் கோயிலில் நடைபெற்றது. உ.வெங்கடேச தீக்ஷிதர் வரவேற்றார். பிரம்ம ஸ்ரீ உ.ர.உமாநாத தீட்சிதர் தலைமை வகித்தார். ஒலித்தகட்டை (சிடி) ஸ்ரீஐயப்ப தீட்சிதர் சகோதரிகள்  ஜெயலக்ஷ்மி, சிவகாமசுந்தரி, ராஜசுலோச்சனா மற்றும் ஐயப்பதீக்ஷிதர் மகள் லலிதா ஆகியோர் வெளியிட ஸ்ரீநடராஜர் கோயில் கமிட்டி உறுப்பினர் ஸ்ரீதன்வந்திரி தீட்சிதர் பெற்றுக்கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் டாக்டர் B.M சுந்தரம், வழக்குரைஞர் ஏ.சம்பந்தம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். சிக்கல் குருசரண் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீசபாபதி சங்கீத கானசபா நிறுவனர் சு.ஐயப்ப தீக்ஷிதர் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.