மாட்டு வண்டி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்!
மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருதி புவனகிரி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு
சிதம்பரத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருதி புவனகிரி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைவர் டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஜே.வேல்முருகன், துணைச் செயலாளர் டி.ராமமூர்த்தி, துணைத்தலைவர் எஸ்.முருகன், பொருளாளர் ஏ.உமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.பி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.முத்துக்குமரன், டி,ரவிச்சந்திரன், எஸ்.காசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.