முகப்பு
தற்போதைய செய்திகள்

பீடி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: நெல்லை மாவட்டத்தில் 2 லட்சம் பங்கேற்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பீடித் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போராட்டத்தில் சுமார்2

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

ஊதிய உயர்வு உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பீடித் தொழிலாளர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருநெல்வேலி மாவட்டத்தில் இப்போராட்டத்தில் சுமார்2 லட்சம் பேர் பங்கேற்றதாக சிஐடியூ தலைவர் எம். ராஜாங்கம் தெரிவித்தனர்.

பீடி சுற்றும் தொழிலாளர்களுக்கு ஆயிரம் பீடி சுற்றுவதற்கு குறைந்தபட்சக்  கூலியாக ரூ.200 வழங்க வேண்டும். பீடித் தொழிலாளர்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும். 1000 பீடிக்கு 700 கிராம் தரமான இலை வழங்க வேண்டும். அனைத்து பீடித் தொழிலாளர்களுக்கும் இ.பி.எப். மூலம் குறைந்த பட்சம் ஓய்வூதியம் ரூ. 1,000  வழங்க வேண்டும். மத்திய தொழிலாளர் நல அமைப்பு மூலம் ஓய்வூதியம் ரூ. 3,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 19 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டம் குறித்து பீடித் தொழிலாளர்கள் சங்க (சிஐடியூ) தலைவர் எம். ராஜாங்கம் கூறியதாவது:

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேலப்பாளையம், முக்கூடல், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், தென்காசி, பாவூர்சத்திரம், சுரண்டை, சேர்ந்தமரம், முதலியார்பட்டி உள்ளிட்ட பகுதியில் உள்ள 2 லட்சம் பீடித் தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →