முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவிலி. மாணவருக்கு சிறந்த என்.எஸ்.எஸ். மாணவருக்கான தேசிய விருது: குடியரசுத் தலைவர் வழங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் ர.நந்தகுமாருக்கு, சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவருக்கான தேசிய விருதை செவ்வாய்கிழமை புது தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:51 PM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவர் ர.நந்தகுமாருக்கு, சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவருக்கான தேசிய விருதை செவ்வாய்கிழமை புது தில்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, மம்சாபுரம்-இடையங்குளம், சுப்புராஜ் கார்ட்டன் மில் காலனியைச் சேர்ந்தவர் ரவீந்திரன் மகன் நந்தகுமார். இவர் காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தில் 2013-ம் ஆண்டு எம்.பி.ஏ. படித்து முடித்துள்ளார். என்.எஸ்.எஸ். அமைப்பில் சேர்ந்து பல்வேறு சேவைகளைச் செய்த நந்தகுமாருக்கு 2012-13-ம் ஆண்டிற்கான சிறந்த நாட்டு நலப் பணித் திட்ட மாணவருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்திரா காந்தி பிறந்தநாள் அன்று நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த என்.எஸ்.எஸ். மாணவர்களுக்கு குடியரசுத் தலைவர் இந்த விருதை வழங்குவார். இந்த விருது வெள்ளிப் பதக்கம், சான்றிதழ் மற்றும் ரொக்கம் ரூ.15 ஆயிரம் அடங்கியது. இந்தியா முழுவதும் இருந்து 15 மாணவர்களும், 15 மாணவிகளும் இந்த விருதுக்கு தேர்வு பெற்றனர். தமிழ்நாட்டில் இருந்து இரு மாணவர்களும், ஒரு மாணவியும் தேர்வு பெற்றனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் நந்தகுமாரும் அடங்கும்.

புது தில்லியில், குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த விருதை, மாணவர் நந்தகுமாருக்கு, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்.

முழு கட்டுரையைப் படிக்க →