முகப்பு
தற்போதைய செய்திகள்

திருநெல்வேலி : நீர்பிடிப்பு பகுதியில் மழை; அணைகளில் நீர்மட்டம் உயர்வு

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்: பாபநாசம் அணையில் 28 மி,மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 10 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 19 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 6.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 33 மி.மீ மழையும், ராமநதி அணையில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மிதமான மழை பெய்து வருகிறது. வியாழக்கிழமை காலை நிலவரப்படி பதிவான மழை அளவு விவரம்: பாபநாசம் அணையில் 28 மி,மீ மழையும், பாபநாசம் கீழ் அணையில் 10 மி.மீ மழையும், சேர்வலாறு அணையில் 19 மி.மீ மழையும், மணிமுத்தாறு அணையில் 6.2 மி.மீ மழையும், கடனாநதி அணையில் 33 மி.மீ மழையும், ராமநதி அணையில் 24 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

இது தவிர அம்பாசமுத்திரத்தில் 56.4 மி.மீ மழையும், கன்னடியன் அணைக்கட்டில் 37.2 மி.மீ மழையும், கருப்பாநதியில் 12 மி.மீ மழையும், குண்டாறு அணையில் 2 மி.மீ மழையும், அடவிநயினார் அணையில் 20 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீர்மட்டம் உயர்வு: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 95.25 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 108.00 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 68.90 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் 1.50 அடி உயர்ந்து 61.50 அடியாகவும், ராமநதி அணையின் நீர்மட்டம் 2.50 அடி உயர்ந்து 62.25 அடியாகவும் இருந்தது.

கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 3.28 அடி உயர்ந்து 51.51 அடியாகவும், அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 112.00 அடியாகவும் இருந்தது. கடனாநதி அணைக்கு விநாடிக்கு 144 கனஅடியும், ராமநதி அணைக்கு விநாடிக்கு 95 கனஅடியும், கருப்பாநதி அணைக்கு விநாடிக்கு 128 கனஅடியும், அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 98 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

முழு கட்டுரையைப் படிக்க →