முகப்பு
தற்போதைய செய்திகள்

பிசான பருவத்தில் 65,000 ஹெக்டேர் சாகுபடி இலக்கு: வேளாண் இணை இயக்குநகர் தகவல்

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் 65,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 6865 ஹெக்டேரில் நடவு பணி முடிவடைந்துள்ளது என வேளாண் இணை இயக்குநர் கி. செளந்தரராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:53 PM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் 65,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 6865 ஹெக்டேரில் நடவு பணி முடிவடைந்துள்ளது என வேளாண் இணை இயக்குநர் கி. செளந்தரராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.

தாமிரவருணி பாசனத்தில் பிசான பருவ சாகுபடி பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணை மூலம் பாசனம் பெறும் அம்பாசமுத்திரம், விக்கிரமசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், முக்கூடல், பாப்பாக்குடி, சேரன்மகாதேவி, பத்தமடை பகுதியில் விவசாயிகள் நடவு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிசான பருவ சாகுபடி குறித்து திருநெல்வேலி வேளாண் இணை இயக்குநர் கி. செளந்திரராஜன் வியாழக்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் கார் பருவத்தில் 19,000 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் எதிர்பார்த்தை விட 21,500 ஹெக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டது. நிகழ் பிசான பருவத்தில் 65,000 ஹெக்டேர் சாகுபடி செய்வதென இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தேவையான நெல் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

அம்பை 16, ஆடுதுறை 39, ஆடுதுறை 43, ஆடுதுறை 45 ஆகிய விதை ரகங்களும், கர்நாடகா, ஆந்திர பொன்னி ரக விதைகளும் அதிகளவில் விநியோகம் செய்யப்பட்டு சாகுபடிகள் தொடங்கப்பட்டுள்ளன. தென்காசி, கடையநல்லூர், செங்கோட்டை, கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, முக்கூடல் மற்றும் சிவகிரி வட்டாரங்களில் முழு அளவில் விவசாயப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு்ள்ளன. இதுவரை 6865 ஹெக்டேரில் நெல் நடவு பணி முடிவடைந்துள்ளது.

இப்பருவத்தில் பருவ மழை போதுமான அளவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கரன்கோவில், ராதாபுரம், நான்குனேரி வட்டங்களில் மழை பெய்தால்தான் பாசனப் பணிகளை தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த 2012 ம் ஆண்டை விட கூடுதலாக சாகுபடி செய்ய உத்தேசிக்கப்பட்டு்ள்ளது என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →