உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வள மைய பயிற்சியரங்கில், வட்டார அளவிலான உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புடன், வாசித்தல், பிழையின்றி எழுதுதல், எழுத்துக்களை சரியான வடிவத்தில் எழுதுதல், அடிப்படை கணக்குகளான கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல் ஆகியவற்றை சரியான முறையில் செய்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் கி.இராமசுப்பு தொடங்கி வைத்து பேசுகையில் கூறியதாவது:
மாதந்தோறும் நடைபெறும் அடைவுத் தேர்வில் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணிதம் ஆகிய திறன்களில் பள்ளிக் குழந்தைகள் மேம்பாடு அடைய ஆசிரியர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணித அடிப்படைத்திறன்களை மாணவர்கள் அடைதலே இடைநிற்றலற்ற கல்விக்கு வழிவகுக்கும் என்றார் அவர். பயிற்சியை உதவி தொடக்க கல்வி அலுவலர் சி.பாலமுருகன், கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் ராமலட்சுமி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தங்கவேலு ஆகியோர் பார்வையிட்டனர்.
பயிற்சியில் கருத்தாளர்களாக ஆசிரியர் பயிற்றுநர்கள் பா.வனிதா, வீ.செல்வராணி, ச.சுந்தரேஸ்வரி, ச.முத்துலட்சுமி ஆகியோர் செயல்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய பயிற்சி ஒருங்கிணைப்பாளர் குருசாமி செய்திருந்தார்.