லெஹர் புயல்: காரைக்கால் துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக காரைக்கால் துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
ஹெலன் என்ற புயல் ஆந்திர மாநிலப் பகுதியில் கரை கடந்த நிலையில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவெடுத்தது. இதற்கு லெகர் என்று பெயர் சூட்டப்பட்டது. இப்புயல் ஞாயிற்றுக்கிழமை இரவு கரையை கடக்குமென கூறப்பட்டாலும், தொடர்ந்த 4 நாள்கள் தமிழக கடலோர மாவட்டங்கள் மழை பெய்யுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் லெஹர் புயல் காரணமாக காரைக்கால் மார்க் துறைமுகத்தில் சனிக்கிழமை இரவு வரை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை பகல் 12 மணியளவில் 2-ம் எண் புயல் எச்சரி்க்கை கூண்டு ஏற்றப்பட்டது. காரைக்கால் மாவட்ட மீனவர்கள் சனிக்கிழமை இரவு வழக்கம்போல் விசைப்படகு மூலம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடல் சீற்றம் அதிகமாக காணப்படவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பரவலாக மழை பெய்தது.