முகப்பு
தற்போதைய செய்திகள்

தேமுதிக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

போக்குவரத்து கழகங்களில் ஆளும்கட்சி நி்ர்வாகிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தேமுதிக போக்குவரத்துத் தொழிலாளர்கள்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:57 PM
பகிர்:

போக்குவரத்து கழகங்களில் ஆளும்கட்சி நி்ர்வாகிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தேமுதிக போக்குவரத்துத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை அனைத்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 10 சதவிகித அகவிலைப்படியை உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளர்களின் பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும். 240 தினங்கள் பணி முடித்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

ஆளும் கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கப்படும் சலுகையினை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேமுதிக சார்பு அமைப்பான தேசிய முற்போக்கு தொழிற்சங்கம் சார்பில் திருநெல்வேலி வண்ணார்பேட்டையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக அலுவலக முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாநில தொழிற்சங்கத் துணைச் செயலர் த. ஆதிலிங்கபெருமாள், திருநெல்வேலி மாவட்டத் தலைவர் உ. ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்ட தொழிற்சங்க செயலர் கர்னல்தேவதாஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →