முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் மாவீரன் தினம்!

இலங்கை விடுதலைப் போரில் நவ.27-ல் மரணமடைந்த சங்கர் நினைவாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது பிறந்தநாளாக மாவீரர்தினமாக கொண்டாடி வந்தார். அதனை தொடர்ந்து

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:59 PM
பகிர்:

கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தினம் சிதம்பரம் மேலவீதியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

இலங்கை விடுதலைப் போரில் நவ.27-ல் மரணமடைந்த சங்கர் நினைவாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் தனது பிறந்தநாளாக மாவீரர்தினமாக கொண்டாடி வந்தார். அதனை தொடர்ந்து விடுதலைப்புலிகளும், தமிழ் அமைப்புகளும் ஆண்டு தோறும் மாவீரர் தினமாக கொண்டாடி வருகின்றனர். கடலூர் தெற்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் மேலவீதி பெரியார் சிலை அருகே பிரபாகரன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி மாவீரர் தினத்தை கொண்டாடினர். மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் குறிஞ்சிவளவன், தமிழ்வளவன், மாவட்ட அமைப்பாளர்கள் செல்வமணி, பாலஅறவாழி, சங்கர், நகர பொறுப்பாளர்கள் ரத்தினவேல், பெரு.திருவரசு, ஆதிமூலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.