சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் திடீர் தீவிபத்து: ஆவணங்கள் அறை எரிந்து சேதம்
சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டு ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சேதமுற்றன. சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஆவணங்கள் அறையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவே உள்ளுக்குள் திடீரென தீப்பிடித்துள்ளது.

அறையிலிருந்து ஆவணங்கள் எரிந்து மேல்கூரையில் தீப்பிடித்து புதன்கிழமை அதிகாலை வெளியில் தெரிந்தது கண்டு அருகிலிருந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த சிதம்பரம் தீயணைப்பு மீட்புத்துறையினர் இரு வாகனங்களில் சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இத்தீவிபத்தில் அறையிலிருந்த ஆதிதிராவிட நல வட்டடாட்சியர் அலுவலக ஆவணங்கள், நிலஎடுப்பு சம்பந்தப்பட்ட ஆவணங்கள் மற்றும் கோப்புகள், ஆதிதிராவிடநலத்துறை பள்ளிகளில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்களின் ஆவணங்கள் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளுக்கான சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்கள், நோட்டுகள் ஆகியவை எரிந்து சேதமுற்றன. தீவிபத்து குறித்து சிதம்பரம் நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.