முகப்பு
தற்போதைய செய்திகள்

வாய்க்கால் தூர்வாருவதாக உறுதி: இந்து ஆலய பாதுகாப்புக் குழு போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் தீர்த்தகுளமான ஓமக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்காலை ரூ.4 லட்சம் செலவில் தூர்வாருவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உறுதியளித்து கடிதம் அளித்ததால் இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் நடத்த இருந்த அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட்டன என ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:00 PM
பகிர்:

சிதம்பரம் தீர்த்தகுளமான ஓமக்குளத்திற்கு நீர் வரும் வாய்க்காலை ரூ.4 லட்சம் செலவில் தூர்வாருவதாக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உறுதியளித்து கடிதம் அளித்ததால் இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் நடத்த இருந்த அனைத்து போராட்டங்களும் கைவிடப்பட்டன என ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்து ஆலய பாதுகாப்புக்குழு சார்பில் தூர்வாரப்பட்ட ஓமக்குளம், நாகச்சேரி குளங்களுக்கு நீர் வரும் பொன்னேரி முதல் ஓமக்குளம் வரையிலான வாய்க்காலை பொதுப்பணித்துறை தூர்வாரி நீர் கொண்டு வர வேண்டும்.

இல்லையெனில் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தப்படும் என ஆலய பாதுகாப்புக்குழு முடிவு செய்தது. இந்நிலையில் சிதம்பரம் கொள்ளிடம் வடிநில கோட்ட பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வரும் ஆண்டு நிதியிலிருந்து ரூ.4 லட்சம் செலவில் பொன்னேரி-ஓமக்குளம் வரையிலான நீர் வரத்து வாய்க்காலை தூர்வாருவதாக உறுதியளித்து கடிதம் கொடுத்துள்ளார்.

அதனால் இந்து ஆலய பாதுகாப்புக்குழுவினரின் அனைத்து போராட்டங்களும் கைவிட முடிவு செய்துள்ளோம் என மு.செங்குட்டுவன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.