அம்பை அருகே மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் சாவு: கலக்கத்தில் விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் வெள்ளிக்கிழமை மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. அடுத்தடுத்து இங்கு 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் வெள்ளிக்கிழமை மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. அடுத்தடுத்து இங்கு 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் நோய் தாக்குதலில் இருந்து கால்நடைகளை பாதுகாக்கும் வகையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 3.54 லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதற்கிடையே திருநெல்வேலி அருகே சீவலப்பேரி அரியகுளத்தில் கிடையில் பட்டியில் அடைத்து வைத்திருந்த 28 ஆட்டுக்குட்டிகள் மூச்சு திணறல் ஏற்பட்டு இறந்தது.
இதையடுத்து அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் விவசாயிகள் வீடுகளில் வளர்த்து வந்த ஆடுகள், ஆட்டுக்குட்டிகள் அடுத்தடுத்து இறந்தது. 2 தினங்களுக்கு முன் விவசாயி முத்துராமனுக்கு சொந்தமான 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன.
இதை தொடர்ந்து கல்லிடைக்குறிச்சி கால்நடை மருத்துவர் முத்துமாரி தலைமையில் மருத்துவக்குழுவினர் அங்கு சென்று விசாரணை நடத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். வியாழக்கிழமையும் அங்கு ஒரு ஆட்டுக்குட்டி இறந்தது. வெள்ளிக்கிழமை இப்பகுதியை சேர்ந்த முத்துராமன், ராமர், பெருமாள் ஆகியோருக்கு சொந்தமான 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தது. அடுத்தடுத்து 4 தினங்களில் வெள்ளங்குளியில் விவசாயிகள் வீடுகளில் வளர்த்து வந்த 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.