முகப்பு
தற்போதைய செய்திகள்

மின்சாரம் தாக்கி இறந்த இரு குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம்: மார்க்சிஸ்ட் எம்எல்ஏ வழங்கினார்

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த இருவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்அமைச்சர் நிவாரண நிதியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

சிதம்பரம் அருகே மின்சாரம் தாக்கி இறந்த இருவர் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் முதல்அமைச்சர் நிவாரண நிதியை சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் சனிக்கிழமை வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடியை சேர்ந்த சுப்பிரமணி, ஹரிதாஸ் ஆகிய இருவர் கடந்த நவ.3-ம் தேதி பெராம்பட்டு அருகே உள்ள திட்டுகாட்டுர் கிராமத்தில் வயலில் கிடந்த மின் கம்பியை மிதித்து இறந்தனர்.இருளர் சமுதயாத்தை சேர்ந்த இருவரது குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து நிவாரண நிதி வழங்க வேண்டும் என சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதினார்.

வேண்டுகோளை ஏற்று இருவரது குடும்பத்தினருக்கு தலா ரூ1 லட்சம் வழங்கிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். அதனடிப்படையில் சிதம்பரம் அருகே வேளக்குடியில் மின்சாரம் தாக்கி இறந்த ஹரிதாஸ் மனைவி சுமதிக்கும், சுப்பிரமணி மனைவி சாந்திக்கும் தலா ரூ ஒரு லட்சத்திற்கான காசோலையை கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ வழங்கினார். எம்எல்ஏவுடன் சிதம்பரம் வட்டாட்சியர் எம்.விஜயா, வருவாய் உதவியாளர் பழனியப்பன், வல்லம்படுகை ஊராட்சி மன்ற தலைவர் ஆறு.கலையரசன், மார்க்சிஸ்ட் கம்யூ கட்சி மாவட்ட செயற்க்குழு உறுப்பினர் பி.கற்பனைச்செல்வம், குமராட்சி ஒன்றியச் செயலாளர் மாசிலாமணி உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.