வேளாங்கண்ணிக்குச் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிந்து பெண் பலி
கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார் ஒன்று, கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கவிந்து விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணம் செய்த சோபியா (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அந்தக் காரில் 5 பேர் பயணம் செய்தனர். கன்னியாகுமர் மாவட்டம் அடைப்புவளைவீடு பகுதியைச் சேர்ந்த சகாதேவன் (52), அவர் மனைவி சோபியா, மகள் பொன்னிமரியாள்(26), மருமகன் ஆண்டனி லெனின் (28), குழந்தை மெர்லின் ஆண்டனி ஆகிய ஐவரும் காரில் வந்து கொண்டிருந்தபோது, கார் சாலையோர பள்ளத்தில் கட்டுப் பாட்டை இழந்து கவிழ்ந்தது. நேற்று நள்ளிரவில் நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் சம்பவ இடத்திலேயே சோபியா பலியானார். மற்ற நால்வரும் திருத்துறைப் பூண்டி பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.