முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீநடராஜர் கோயில் வழக்கில் சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வலியுறுத்தி உண்ணாவிரதம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் சுப்பிரமணியசாமிக்கு எதிராக வாதிட அரசு சிறப்பு

Updated On : 3 ஜனவரி, 2024 at 7:02 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலை அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கில் சுப்பிரமணியசாமிக்கு எதிராக வாதிட அரசு சிறப்பு வழக்கறிஞரை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் உண்ணாவிரதம் சனிக்கிழமை நடைபெற்றது.

உண்ணாவிரதப் போராட்டத்திற்கு மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில இணைச் செயலாளர் வழக்குரைஞர் சி.செந்தில் தலைமை வகித்தார். சிவனடியார் குமுடிமுலை உ.ஆறுமுகசாமி, மனித உரிமை பாதுகாப்பு மைய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் சி.ராஜூ, பாட்டாளி மக்கள் கட்சி துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், நந்தனார் பேரவை ரா.காவியச்செல்வன், மனித உரிமை பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் புஷ்பதேவன், சீர்காழி அம்பிகாபதி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். உண்ணாவிரதத்தில் 150-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.