காட்டுமன்னார்கோயிலில் லாரி திருட்டு!
காட்டுமன்னார்கோயில் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் (65). இவரது தம்பி ஊமைத்துரை பெயரில் TAF 0888 லாரி வாங்கி வாடைகைக்கு விட்டுள்ளார். இந்த லாரி தமிழ்நாடு
காட்டுமன்னார்கோயிலில் வீட்டு முன்பு நிறுத்தியிருந்த லாரியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
காட்டுமன்னார்கோயில் ஆசிரியர் காலனியில் வசிப்பவர் ஓய்வுபெற்ற ஆசிரியர் ராஜேந்திரன் (65). இவரது தம்பி ஊமைத்துரை பெயரில் TAF 0888 லாரி வாங்கி வாடைகைக்கு விட்டுள்ளார். இந்த லாரி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப்பக் கழகத்திற்கு ரேஷன் அரிசி ஏற்றி கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளது. லாரியை பழஞ்சநல்லூரைச் சேர்ந்த கண்ணன் என்ற டிரைவர் ஓட்டி வருகிறார். இந்நிலையில் அக்.1-ம் தேதி லாரியை எடுத்துச் சென்ற டிரைவர் பணி ஏதுவும் இல்லை என பிற்பகல் ராஜேந்திரன் வீட்டு முன்பு சாலையோரம் நிறுத்திவிட்டு சாவியை கொடுத்துவிட்டு சென்றுள்ளார். அக்.2-ம் தேதி அதிகாலை பார்க்கும் போது லாரியை காணவில்லை.
இதுகுறித்து ராஜேந்திரன் கொடுத்த புகாரின் பேரில் காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.