முகப்பு
தற்போதைய செய்திகள்

அண்ணாமலைப் பல்கலை. வேளாண்புல முதல்வராக ஜே.வசந்தகுமார் மீண்டும் நியமனம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முன்பு இருந்த நிர்வாகத்தின் போது பணிமூப்பு அடிப்படையில் பேராசிரியர் ஜே.வசந்தகுமார் 1-7-2010ல் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 6 மாதங்கள் கழித்து ஜே.வசந்தகுமார்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:04 PM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்புல முதல்வர் மாற்றப்பட்டு புதிய முதல்வராக பேராசிரியர் ஜே.வசந்தகுமார் நியமிக்கப்பட்டு வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முன்பு இருந்த நிர்வாகத்தின் போது பணிமூப்பு அடிப்படையில் பேராசிரியர் ஜே.வசந்தகுமார் 1-7-2010ல் நியமிக்கப்பட்டார். அதன்பின்னர் 6 மாதங்கள் கழித்து ஜே.வசந்தகுமார் பதவிஇறக்கம் செய்யப்பட்டு நிர்வாகத்திற்கு வேண்டப்பட்டவரான அதே புலத்தில் இருந்த பேராசிரியர் ராம.கதிரேசன் என்பவர் புல முதல்வராக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்று செயல்பட்டு வந்தார்.

தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அரசு முழுக்கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டதை அடுத்து ஏற்கனவே பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்பட்ட பேராசிரியர் ஜே.வசந்தகுமார், பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் வேளாண்புல முதல்வராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து புதிய முதல்வராக ஜே.வசந்தகுமார் வியாழக்கிழமை பொறுப்பேற்றார்.மேலும் பல்கலைக்கழகத்தில் பணிமூப்பு அடிப்படையில் நியமிக்கப்படாமல் பணியாற்றி வரும் புல முதல்வர்கள், துறைத் தலைவர்கள் அனைவரும் விரைவில் மாற்றம் செய்யப்படுவார்கள் என பல்கலைக்கழக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.