முகப்பு
தற்போதைய செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலைமறியல்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட ஏழாயிரம்பண்னை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 15ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மானூர் குடிநீர் திட்டத்தின்

Updated On : 3 அக்டோபர், 2013 at 1:21 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 11:34 PM

சாத்தூர் அருகே முறையான குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிகுடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியில் ஈடுபட்டனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட ஏழாயிரம்பண்னை கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் சுமார் 15ஆயிரத்திற்க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு மானூர் குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கபட்டு வருகிறது.இந்நிலையில் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர்,ஒரு வாரத்திற்க்கு ஒரு முறை ஒரு குடம் மட்டும் வழங்கபடுவதாக கூறப்படுகிறது,ஆனால் தற்போது அந்த குடிநீர் நிறுத்தபட்டுள்ளது.இந்நிலையில் இப்பகுதி மக்கள் ஒரு குடம் 10 ரூபாய் கொடுத்து குடிநீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த ஏழாயிரம்பண்னை மற்றும் பழைய ஏழாயிரம்பண்னையை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் ஏழாயிரம்பண்னை-சாத்தூர் சாலையில் அமர்ந்து தீடீர் மறியலில் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டுள்ளனர்.சுமார் இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்த போராட்டத்திற்க்கு பின்னர் ஏழாயிரம்பண்னை போலீஸார் மற்றும் சாத்தூர் வட்டாட்சியர் அன்னலட்சுமி,வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மறியில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.பேச்சுவார்த்தையில் முறையான குடிநீர் வழங்கபடும் என்று உறுதியளித்தையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.