ரயில் மேம்பால வளைவில் பேருந்து மோதி வடமாநில சுற்றுலா பயணி, ஓட்டுநர் சாவு
ராஜஸ்தான் மாநிலம் கோவிந்தபுரா பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஒரு மாதமாக நாடு முழுவதும் சுற்றுலா பயணம் செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த இவர்கள், இங்கிருந்து மைசூர் செல்வதற்காக ஈரோட்டில் இருந்து கிளம்பினர்.
ரயில் மேம்பால வளைவில் பேருந்து மோதிய விபத்தில் பேருந்தின் மேற்கூரையில் பயணம் செய்த வடமாநில சுற்றுலா பயணி மற்றும் ஓட்டுநர் ஆகியோர் இறந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் கோவிந்தபுரா பகுதியை சேர்ந்த 60-க்கும் மேற்பட்டோர் ஒரு மாதமாக நாடு முழுவதும் சுற்றுலா பயணம் செய்து வருகின்றனர். ஈரோடு மாவட்டத்துக்கு புதன்கிழமை வந்த இவர்கள், இங்கிருந்து மைசூர் செல்வதற்காக ஈரோட்டில் இருந்து கிளம்பினர்.
சத்தி சாலையில் செல்வதற்கு பதிலாக வழிமாறி சென்னிமலை சாலை வழியாக சென்றனர். பேருந்தின் மேற்கூரையில் ராஜஸ்தான் மாநிலம் கோவிந்தபுரா பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணி ஓம்பிரகாஷ் (45), மாற்று ஓட்டுநர் மகேந்திரன் (35) ஆகியோர் பயணம் செய்தனர்.
ரங்கம்பாளையம் அருகே சென்றபோது கே.கே.நகர் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவு பாலத்தின் மீது பேருந்து மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்த ஓம்பிரகாஷ், மகேந்திரன் ஆகியோர் ஈரோடு அரசுத் தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஈரோடு தாலுகா போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று சுற்றுலா பேருந்தை மீட்டு, தாலுகா காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பாக ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயம் அடைந்த ஓம்பிரகாஷ், மகேந்திரன் ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.