அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி, எஸ்டி மாணவர்கள் தர்ணா!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கான கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புல முதல்வர் அறை முன்பு வெள்ளிக்கிழமை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கான கட்டண சலுகைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தி புல முதல்வர் அறை முன்பு வெள்ளிக்கிழமை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகஅரசு அரசாணை-92ன் படி எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கு அறிவித்துள்ள கல்வி கட்டண சலுகைகளை அண்ணாமலைப் பல்கலை. எஸ்சி., எஸ்டி மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி பல்கலைக்கழக முற்போக்கு மாணவர் பேரவை சார்பில் முன்னாள் மாணவர் சபரிநாத் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெள்ளிக்கிழமை பொறியியல் புல முதல்வர் அறை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் பதிவாளர் என்.பஞ்சநதம், புல முதல்வர் வேலுசாமி, டிஎஸ்பி ஆர்.ராஜாராம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கல்வி கட்டண சலுகை வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றத்தருவதாக தெரிவித்ததை அடுத்து மாணவர்கள் போராட்டத்தில் வாபஸ் பெற்றனர்.