முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரத்தில் 12 வயது சிறுமி நகைக்காக கடத்தப்பட்டு விடுவிப்பு

சிதம்பரத்தில் 7-ம் வகுப்பு பயிலும் 12 வயது சிறுமி நகைக்காக ஆட்டோவில் கடத்தப்பட்டு, கவரிங் நகை அணிந்திருத்ததால் விடுவிக்கப்பட்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

சிதம்பரத்தில் 7-ம் வகுப்பு பயிலும் 12 வயது சிறுமி நகைக்காக ஆட்டோவில் கடத்தப்பட்டு, கவரிங் நகை அணிந்திருத்ததால் விடுவிக்கப்பட்டார்.

சிதம்பரம் விநாயகர்நகரைச் சேர்ந்த அரவிந்த். கடலூர் கெம்பிளாஸ்ட் நிறுவனத்தில் சீனியார் எக்ஸ்கியூட்டிவ் மேனேஜராக பணியாற்றுகிறார். இவரது மகள் கீர்த்தனா (12) தனியார் பள்ளியில் 7-ம் பயின்று வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை வீட்டில் சிறுமி கீர்த்தனா தனது பிறந்தநாளை கொண்டாடிவிட்டு கேக் கொடுப்பதற்கு அருகாமையில் உள்ள வீட்டிற்கு சென்றுள்ளார்.

அப்போது ஆட்டோவில் வந்த மர்மஆசாமிகள் சிறுமியை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. தகவல் அறிந்த பெற்றோரும், போலீஸாரும்  சிறுமியை தேடினர்.

இந்நிலையில் ஆட்டோவில் கடத்தி சென்ற மர்மநபர்கள், சிறுமி கவரிங் நகைகள் அணிந்திருந்ததால் சிதம்பரம் தெற்குரதவீதியில் இறக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.

பின்னர் அச்சிறுமி அங்குள்ளவர்களிடம் தெரிவித்து செல்போனை பெற்று தனது தந்தைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து வீட்டிற்கு பத்திரமாக அழைத்துச் செல்லப்பட்டார். இதனால் விநாயகர்நகர் உள்ள சீர்காழி சாலையில் கூட்டம் கூடியதால் சிறிது நேரம் போக்குவரத்து தடைபட்டு பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.