தமிழகத்தில் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை
தமிழகத்தில் காலியாக உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கழகத்தினர் கோரிக்கை
தமிழகத்தில் காலியாக உள்ள முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் மற்றும் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழக பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கழகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் கடந்த 3 ஆண்டுகளாக மாநில முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் (CIPE) பணியிடம் காலியாக உள்ளது. இதனால் கூடுதல் பொறுப்பில் செயல்படுவதால் முழுமையான அதிகாரித்துடன் செயல்பட முடியவில்லை. மேலும் 25 மாவட்டங்களில் உள்ள மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் பணியிடமும் நிரப்படாமல் காலியாக உள்ளது. எனவே தமிழக முதல்வர் உடற்கல்வித்துறை முழு வேகத்துடன் செயல்பட மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் பட்டதாரி உடற்கல்வி ஆசிரியர்கள் கழக மாநிலத் தலைவர் மக்தூம் உசேன். சிதம்பரம் நகருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை உடற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள் சந்தித்து மேற்கண்ட பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர்.