முகப்பு
தற்போதைய செய்திகள்

விடுதலைச் சிறுத்தைகள் கொடிக்கம்பம் சேதம்: சாலைமறியல்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் கொடிக்கம்பம் திங்கள்கிழமை நள்ளிரவு  மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து சிறுத்தை

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:09 PM
பகிர்:

சிதம்பரம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் கொடிக்கம்பம் சேதப்படுத்தப்பட்டதை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் செவ்வாய்க்கிழமை சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் புவனகிரி- சேத்தியாத்தோப்பு நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பு.உடையூர் கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரின் கொடிக்கம்பம் திங்கள்கிழமை நள்ளிரவு  மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டு, அதிலிருந்து சிறுத்தை பொம்மை உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்டித்தும், கொடிக்கம்பத்தை சேதப்படுத்திய 10 பேர் கொண்ட கும்பலை உடனே கைது செய்ய வலியுறுத்தி பு.உடையூர் சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமையில் செவ்வாய்க்கிழமை காலை சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் புவனகிரி போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியல் வாபஸ் பெறப்பட்டது. இதனால் புவனகிரி- சேத்தியாத்தோப்பு நெடுஞ்சாலையில் காலை 8 மணி முதல் 9 மணி வரை ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.