முகப்பு
தற்போதைய செய்திகள்

தம்பி மற்றும் தம்பி மனைவியை கொன்ற அண்ணன்!

சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமம் தெற்குதெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவரது மனைவி சாந்தி (43). விவசாயியான செல்வராஜ் வெள்ளிக்கிழமை காலை தனது மனைவியுடன் வயலில்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:12 PM
பகிர்:

சிதம்பரம் அருகே சொத்து தகராறில் தம்பி மற்றும் தம்பி மனைவியை, அண்ணன் மண்வெட்டியால் அடித்து கொலை செய்தார்.

சிதம்பரம் அருகே உள்ள குச்சிப்பாளையம் கிராமம் தெற்குதெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (45). இவரது மனைவி சாந்தி (43). விவசாயியான செல்வராஜ் வெள்ளிக்கிழமை காலை தனது மனைவியுடன் வயலில் களை எடுத்துவிட்டு புல்கட்டுகளை தலையில் வைத்துக் கொண்டு மற்றும் மண்வெட்டியுடன் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த அவரது அண்ணன் கோவிந்தராஜ் (50) மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் செல்வராஜையும், சாந்தியையும் வழிமறித்து தாக்கினர்.

பின்னர் அண்ணன் கோவிந்தராஜ், மண்வெட்டியால் தம்பி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி சாந்தியை தலையில் பலமாக தாக்கி கொலை செய்துவிட்டு தலைமறைவாகி விட்டனர். தகவல் அறிந்த சிதம்பரம் டிஎஸ்பி ஆர்.ராஜாராம், தாலுக்கா போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பராயலு மற்றும் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சிதம்பரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிந்து தலைமறைவான அண்ணன் கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட செல்வராஜிற்கு துளசிராஜ், கோவிந்தராஜ் என்ற இரு அண்ணன்கள் இருந்தனர். இதில் மூத்த அண்ணன் துளசிராஜ் இறந்தவுடன் கோவிந்தராஜிற்கும், செல்வராஜிற்கும் சொத்து பாகம் பிரிக்கப்பட்டது. சொத்து பாகம் பிரித்ததில் கோவிந்தராஜிற்கும், செல்வராஜிற்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. முன்விரோதம் காரணமாக அண்ணன் கோவிந்தராஜ் செல்வராஜையும், அவரது மனைவி சாந்தியையும் கொலை செய்ததாக போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இறந்த போன செல்வராஜிற்கு, செந்தில், ரவிவர்மன், சதீஷ்குமார் என்ற மூன்று மகன்கள் உள்ளனர். மூத்தமகன் செந்தில் கொத்தனாராக வேலை பார்க்கிறார். 2-வது மகன் ரவிவர்மா சி.முட்லூர் கல்லூரியில் பிஎஸ்சி இன்டஸ்டிரியல் கெமிஸ்டரியும், 3-வது மகன் சதீஷ்குமார் விருத்தாசலம் கல்லூரியில் பிஎஸ்சி விலங்கியல் படிப்பும் படித்து வருகிறார். தந்தை செல்வராஜ், மகன்கள் ரவிவர்மா, சதீஷ்குமார் ஆகிய மூவருக்கும் காது கேட்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.