முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் திடீர் ஆய்வு

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை சிறப்பு செயலரும், திட்ட இயக்குநருமான பங்கஜ்குமார் பன்சால் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனையை தமிழக சுகாதாரத்துறை சிறப்பு செயலரும், திட்ட இயக்குநருமான பங்கஜ்குமார் பன்சால் ஞாயிற்றுக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் ரூ.3 கோடி செலவில் கட்டப்பட்டு புதிதாத திறக்கப்பட்ட மருத்துவமனை கட்டடத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள அறைகளை வெறுமனே வைத்திருக்காமல் பயன்படுத்த உத்தரவிட்டார்.  பிரேத அறையை பார்வையிட்ட அவர் அந்த அறைக்கு விரைவில் ஏர்கண்டீஷன் வசதி செய்தி தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். ஆய்வின் போது அங்குள்ள அதிகாரிகளிடம் சில குறைகளை கண்டுபிடித்து திருத்திக் கொள்ளுமாறு பங்கஜ்குமார் பன்சால் அறிவுறுத்தினார். மேலும் மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தார். ஆய்வின் போது கடலூர் மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணமூர்த்தி, துணை இயக்குநர் ஜவகர்லால், சிதம்பரம் உதவி ஆட்சியர் எம்.அரவிந்த் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.