முகப்பு
தற்போதைய செய்திகள்

கர்நாடகத்திடமிருந்து பெறவேண்டிய நீரை பெற முதல்வருக்கு, உழவர் முன்னணி வலியுறுத்தல்!

காவிரி டெல்டா பாசன கடை, மடை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் போதிய நீரின்றி காய்ந்து கருகி வருகின்றன. மேட்டூரில் போதுமான நீர் இருந்தும் கடை, மடை பகுதிகளும் பாசனம் பெறும் வகையில் நீர்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

காவிரி இறுதி தீர்ப்பின்படி செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு உரிய 62 டிஎம்சி நீரை கர்நாடகத்திடமிருந்து பெற தமிழக முதல்வர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முன்னணி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அம்முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா பாசன கடை, மடை பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் போதிய நீரின்றி காய்ந்து கருகி வருகின்றன. மேட்டூரில் போதுமான நீர் இருந்தும் கடை, மடை பகுதிகளும் பாசனம் பெறும் வகையில் நீர் மேலாண்மை செய்யப்படவில்லை. வீராணம்ஏரியிலிருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்லும் அரசு இங்குள்ள நிலங்களுக்கு பாசன நீரை தர மறுத்து வருகிறது. வேளாண் பாசனத்திற்கு போக மீதமுள்ள நீரை சென்னைக்கு கொண்டு செல்வது என்ற தமிழக முதல்வர் கொடுத்த உறுதிமொழியை மீறும் செயலாகும். எனவே தமிழக முதல்வர் மேட்டூரிலிருந்து கூடுதல் நீரை திறந்து விட ஆணையிட்டு டெல்டா பாசன கடை, மடை பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்ற வேண்டும். அதே வேளையில் கர்நாடகஅரசு நமக்கு தர வேண்டிய 62 டிஎம்சி நீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் சி.ஆறுமுகம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.