முகப்பு
தற்போதைய செய்திகள்

ம.பி. கோயில் சம்பவம்: பா.ஜ.க. அரசின் மெத்தனப் போக்கே காரணம்: காங்கிரஸ்

மத்திய பிரதேச மாநிலம் ரத்தன்கார் துர்கா கோயில் விழா நெரிசலில் சிக்கி 115 பேர் இறந்த சம்பவத்துக்கு மாநில பா.ஜ.க. அரசின் மெத்தனப்போக்கே காரணம் என புதுவை மாநில காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:16 PM
பகிர்:

மத்திய பிரதேச மாநிலம் ரத்தன்கார் துர்கா கோயில் விழா நெரிசலில் சிக்கி 115 பேர் இறந்த சம்பவத்துக்கு மாநில பா.ஜ.க. அரசின் மெத்தனப்போக்கே காரணம் என புதுவை மாநில காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.இதுதொடர்பாக மாநில செய்தித் தொடர்பாளர் ஏவி.வீரராகவன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இக்கோயில் விபத்துக்கு பா.ஜ.க. அரசின் நிர்வாகத் திறமையின்மையும், மெத்தனப் போக்குமே காரணம் ஆகும் என காங்கிரஸ் குற்றம் சாட்டியதற்கு மாநில முதல்வர்

சௌஹான் இதில் அரசியல் செய்யப்போவதில்லை எனக் கூறி உள்ளார்.உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட பேரிடர் சம்பவத்தின்போது மாநில காங்கிரஸ் அரசை, பா.ஜ.க. அரசியல் உள்நோக்கத்தோடு குற்றம் சாட்டியது.குஜராத் முதல்வர் மோடியும் அங்கு வந்து மீட்புப் பணி மேற்கொள்வது போல் ஆதாயம் தேடினார். மத்திய பிரதேசத்தில் துயரமான கோயில் சம்பவம் தொடர்பாக பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் மோடி ஏன் வேடிக்கை பார்க்கிறார்.

துர்கா கோயிலில் லட்சக்கணக்கான மக்கள் வந்து வழிபடும் விழாவுக்கு தேவையான முன்னேற்பாடுகளை பா.ஜ.க. அரசு செய்யத் தவறி விட்டது. இதனால் அப்பாவி பக்தர்கள் உயிரிழந்துள்ளனர்.இதற்கு அம்மாநில அரசின் மெத்தனப் போக்கு தான் காரணம் என்பதை அறிவர். மோடியிடம் நாட்டை ஒப்படைத்தால் தேசமே சீர்குலைந்து விடும் என்றார் வீரராகவன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.