முகப்பு
தற்போதைய செய்திகள்

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் அன்னிய செலவாணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் கைது

நாகை மாவட்டம், கோடியக்கரையை மையமாகக் கொண்டு அயல்நாட்டுக்குத் தங்கம் கடத்துவதில் ஈடுபட்ட வேதாரண்யத்தைச் சேர்ந்த 2 பேர், அன்னிய செலவாணி பாதுகாப்பு மற்றும் கடத்தல்

Updated On : 3 ஜனவரி, 2024 at 6:18 PM
பகிர்:

நாகை மாவட்டம், கோடியக்கரையை மையமாகக் கொண்டு அயல்நாட்டுக்குத் தங்கம் கடத்துவதில் ஈடுபட்ட வேதாரண்யத்தைச் சேர்ந்த 2 பேர், அன்னிய செலவாணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்காடு பகுதியைச் சேர்ந்த சண்முகம் என்ற ஜெயராஜின் மகன் ஆனந்தன்(30). இவரது தந்தை சண்முகம் என்ற ஜெயராஜ், ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பாக சிபிஐ விசாரணையில் இருந்த போது தற்கொலை செய்து கொண்டவர். இதே பகுதியைச் சேர்ந்த வடிவேல் மகன் அறிவழகன்(45).

இவர்களிருவரும், கோடியக்கரையிலிருந்து தங்கம் கடத்தியதாக கடந்த 2 ஆண்டுகளில்   3 முறை கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து சுமார் 45 கிலோவுக்கும் அதிகமான எடையில் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தங்கம் கடத்தல் தொடர்பாக வருவாய் நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்ட, ஆனந்தன் மற்றும் அறிவழகன் அண்மையில் பிணையில் வெளியே வந்தனர்.

அவர்கள் தொடர்ந்து கடத்தலில் ஈடுபடும் வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு, ஆனந்தன் மற்றும் அறிவழகனை அன்னிய செலவாணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வருவாய் நுண்ணறிவுப் போலீஸார் உத்தரவுப் பெற்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →