வடிகால் வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை!
சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையில் சிதம்பரம் நகர எல்லையில் உள்ளது ஓமக்குளம் வடிகால் வாய்க்கால். இந்த வாய்க்காலில் ஆகாயத்தாரமை செடிகள் படர்ந்து
சிதம்பரம் நகர பகுதியில் உள்ள ஓமக்குளம் வடிகால் வாய்க்காலில் ஆகாயத்தாமரை முற்றிலுமாக படர்ந்து ஆக்கிரமித்துள்ளதால் கழிவுநீர் கலந்து அந்த நீர் வெளியேற முடியாமல் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில் சாலையில் சிதம்பரம் நகர எல்லையில் உள்ளது ஓமக்குளம் வடிகால் வாய்க்கால். இந்த வாய்க்காலில் ஆகாயத்தாரமை செடிகள் படர்ந்து முற்றிலும் ஆக்கிரமித்து காட்சியளிக்கிறது. தற்போது அந்த வடிகால் வாய்க்காலில் கழிவுநீரும், மழை நீர் சேர்ந்து உள்ள நீர் ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பினால் வடியாமல் மிகுந்த துர்நாற்றம் வீசுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட வடிகால் வாய்க்காலில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாய சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் இதுகுறித்து தெரிவித்தது: ஆண்டு தோறும் சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பாசன வடிகால் வாய்க்காலில் செம்படம்பர் மாதம்தான் நீர் வருகிறது. சுமார் 7 மாதங்கள் மேற்கண்ட இரு வட்டங்களில் உள்ள அனைத்து பாசன வடிகால் வாய்க்கால்களும் காய்ந்து புதர் மண்டி போகிறது. நீரில்லாத காலங்களில் வாய்க்கால்களை மராமத்து செய்யப்படுவதில்லை. இதனால் மழைக்காலங்களில் வடிகால் வாய்க்கால்களில் புதர் மண்டியும், ஆகாயத் தாமரைகள் படர்ந்து ஆக்கிரமிப்பதால், நீர் வடியாமல் ஆண்டு தோறும் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது. எனவே தமிழகஅரசு வடிக்கால் வாய்க்கால்களை மராமத்து செய்து சீரமைக்க ஆண்டு தோறும் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்கிறார் பி.ரவீந்திரன்.